ஐந்து மொழிகளில் வெளியீடு காணவுள்ள தசரா திரைப்படத்தின் 'மையினரு வெட்டி கட்டி' பாடல் இணையத்தில் வெளியீடு கண்டது.
நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி என முக்கிய கதாப்பாத்திரங்கள் நடிக்கும் 'தசரா' திரைப்படத்தின் 3வது பாடல் இணையத்தில் வெளியீட்டது திரைப்படக்குழு. இந்தப் பாடலை அனிருத் மற்றும் தீ பாடியுள்ளனர். இதன் பாடல் வரிகளை முத்தமிழ் எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ‘அடடே சுந்தரா’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் படம் ‘தசரா’. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
நேச்சுரல் ஸ்டாரான நானியின் முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது இந்த ‘தசரா’ திரைப்படம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.
ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இப்படத்தில் இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில் நானி நடிக்கிறார். ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக முழுக்க முழுக்க மாறி, ஒரு கிராமிய கதாப்பாத்திரத்தில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக மாற்றிக் கொண்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சு வழக்கு மொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் வசனங்களைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.
![]() |
| Click here to Watch the Teaser |
இத்திரைப்படம் வருகின்றன மார்ச் 30 உலகளவில் ஐந்து மொழிகளில் வெளியீடு காணவுள்ளது. மேலும் இப்படத்தில் 'மாநகரம்' 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சத்யன் சூர்யன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks