பிராசாரானா போக்குவரத்து 1 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்துள்ளது


கோலாலம்பூர் மார்ச் 25 -
மலேசியா கோறணி நட்சிற்க்குப் பிந்திய நிலைக்கு திரும்பிய பிறகு, பிராசாரனாவின் கீழ் இயங்கும் பேருந்து மற்றும் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தினசரி ஒரு மில்லியனை எட்டியுள்ளது.

இவ்வெண்ணிக்கையை கடந்த மார்ச் 21ஆம் தேதி பதிவானதாக பிராசாரான நிறுவனம் இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்வழி தெரிவித்துள்ளது.

இந்த ஒரு மில்லியன் பயணிகள் பதிவு கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை பதிசெய்த நாள் ஒன்றுக்கு 846,000 பயணிகள் எண்ணிக்கையைவிட அதிகரித்துள்ளது. இந்த 846,000 பயணிகளிலிருந்து ரேப்பிட் ரயில் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 767,000 ஆகும். இதர 235,000 பயணிகள் ரேப்பிட் பேருந்துச் சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டை கோறணி நட்சு தாக்குவதற்கு முன்பு  பிராசாரானா போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் சராசரி பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் ஆகும்.

தற்போது பதிவாகியுள்ள 1 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்ட புத்ராஜெயா எம் ஆர்டி துரித ரயில் சேவையைப் பயன்படுத்தும் ஒரு லட்சம் பயணிகளும் அடங்குவர்.

தற்போது இந்த புத்ராஜெயா ரயில் சேவையை கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதி வரை இலவச சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சலுகைக்குள் இலவச எம் ஆர் டி பேருந்து சேவையும் அடங்கும்.

இதுவரை வற்றாத ஆதரவை வழங்கி பிராசாரானாவின் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்திவரும் அனைத்து பயணிகளுக்கும் அந்நிறுவனம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

அதுமட்டுமல்லாமல் வருங்காலங்களில் பிராசாரானா தனது சேவையை மேம்படுத்தும் விதமாக பாதுகாப்பு, துரிதமான நிலையான போக்குவரத்து வசதியைப் ஏற்படுத்தித் தறுவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேல் விபரங்களுக்கு, பயணிகள் suggest@rapidkl.com.my அல்லது 03-7885 2585 என்ற தொலைபேசி எண் வழி தோடர்பு கொள்ளலாம்.  இந்த சேவை திங்கள் முதல் வெள்ளிவரை காலை 7 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரை மக்களுக்காகத் திறந்திருக்கும். மேலும் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகளில் இந்த தகவல் சேவை மூடப்பட்டிருக்கும்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement