சிலாங்கூர், பிப், 8 - இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில் அதிக எண்ணிக்கையிலான தேநீர் வழங்கியதற்காகவும் அதனை ஏற்பாடு செய்தற்காகவும் இன்று 'BOH' நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டது.
தைப்பூசத்தன்று இரண்டு நாட்களுக்கு 'BOH' நிறுவனம் இலவசமாக 102,000 கோப்பை தேநீர் வழங்கி பக்தர்களின் தாகத்தை தீர்த்தமைக்கும் அதிக அளவிலான எண்ணிக்கையில் தேநீர் வழங்கியதற்காகவும் மலேசிய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தது.
பத்துமலை திருத்தலத்திற்கு பத்துமலையானை பக்தி பரவசத்தோடு காண வந்த பொதுமக்களுக்கும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த வந்திருந்த முருகப் பக்தர்களை 'BOH' நிறுவனம் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில் 102,000 கோப்பை தேநீர் வழங்கி சிறப்பித்தனர். இதில் அவர்களை மக்களிடம் நேரடியாகவும் கொண்டு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகள் கோறணி நற்ச்சின் காரணமாக கட்டுப்பாட்டுக்குப் உற்பட்டு இருந்ததால் அதிகமான பக்தர்கள் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. இவ்வாண்டு அந்த தளர்வு நீக்கப்பட்டதால் அதிகமான பக்தர்கள் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துச் சிறப்பித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகள் கோறணி நற்ச்சின் காரணமாக கட்டுப்பாட்டுக்குப் உற்பட்டு இருந்ததால் அதிகமான பக்தர்கள் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. இவ்வாண்டு அந்த தளர்வு நீக்கப்பட்டதால் அதிகமான பக்தர்கள் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துச் சிறப்பித்தனர்.
அனைத்து தரப்பு மக்களுடன் தொடர்புக் கொள்வதற்கும் இத்தைப்பூசத் திருவிழாவின் சிறப்பம்சங்களை நெருக்கமாக அனுபவிப்பதற்கும் ‘BOH’ நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு அர்த்தமுள்ள மற்றும் உணர்ச்சிகரமான தருணம். தேசிய சாதனையை இத்திருவிழாவின் முலம் அடைந்ததை பெருமையாகவுள்ளது. நாங்கள் திட்டமிட்ட இலக்கான 1 இலட்சம் கோப்பை தேநீரை மக்கள் ஆதரவுடன் மிக சுலபமாக அடைந்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் ‘BOH’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் ஃபூ தெரிவித்தார்.
கேமரன் மலையிலிருந்து தரிவிக்கப்பட்ட ‘BOH’ தேயிலையின் ருசியை மக்கள் ருசிப்பதற்கும் அனுபவிக்க இத்தைப்பூசத்திருவிழா எங்களுக்கு ஒரு வாய்பாக அமைந்தது. அண்மையில் நம் சமுதாயத்திற்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தமைக்குப் புத்ரா பிராண்ட் விருதுகளில் தங்க விருதை வென்றத்திற்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பிராண்டுக்கான விருதைப் பெற்றதிற்கும் ‘BOH’ நிறுவனம் பெருமிதம் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks