இவ்வாண்டு தைப்பூசத்தில் 'BOH Tea'யின் 1 லட்சம் கோப்பை தேநீர்


சிலாங்கூர் பிப் 2-
இவ்வாண்டு தைப்பூசத்திற்கு தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த செலுத்த வருகின்ற மக்களுக்கு தேநீர் விருந்தாளிப்பதோடு அவர்களின் தாகத்தை தீர்க்கும் தருனத்தை சாதனையாக்கவுள்ளனர் 'BOH Tea' நிறுவனம். 

ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானைப் போற்றும் மாபெரும் விழாவாக கொண்டாப்படும் தைப்பூசத் திருவிழா இவ்வாண்டும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அதிகமான பொதுமக்களும் சுற்றுபாயணிகளும் கலந்துக் கொள்வார்கள். மலேசியாவை பொதுத்தமாட்டில் அதிகமான மக்கள் பல மாநிலங்களில் கொண்டாடும் விழாவாகவும் இத்திருவிழா நடக்கவுள்ளது. 

நம் நாட்டு உற்பத்தியான 'BOH Tea' நிறுவனத்தின் பஹாங், கேமரன் மலையிலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை ருசித்து பருக 'BOH Tea' நிறுவனம் இவ்வாண்டு தைப்பூசத்தில் 1 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக  வழங்கவுள்ளது. 

மலேசியாவின் முன்னணி தேயிலை தயாரிப்பு நிறுவனமான 'BOH Tea' இந்த தைப்பூசத்தில் ஒரு அங்கமாக அமைவதில் பெருமிதம் கொள்கிறது. இவ்வாண்டு நடைபெறவுள்ள தைப்பூசத்திருவிழாவில் வருகையாளிக்கவுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்களின் பானத் தேவைகளை பூர்த்தி செய்யும்.

அதேவேளையில், பிரசித்திபெற்ற இந்த சமய விழாவின் கலாச்சார விழிப்புணர்வு மற்றும் காவடிகள் பால்குடங்களை ஏந்தி வரும் பக்தர்களுக்கு 'BOH' தேநீர் புத்துணர்ச்சியையும் புத்துணர்வையும் ஊட்டும் என்பதில் எந்த ஐயமுமில்லை என 'BOH' தோட்டத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஜேசன் ஃபூ குறிப்பிட்டார். 

பொதுமக்கள் 'BOH Tea' தேநீரை இரண்டு நாட்களுக்கு பிப்ரவரி 4 இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலும் மறுநாள் பிப்ரவரி 5 நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் 1 லட்சம் தேநீர் கோப்பைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. 


இதன்க வழி அதிக கோப்பைகளை வழங்கி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் 'BOH' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனை பதிக்கத்தில் அனைவரும் பங்களிக்க இது வாய்ப்பாக அமையும்.  பொதுமக்கள் ஒரு கப் 'BOH' தேநீர் பருகி மலேசிய சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பங்களித்து உறுதுணையாக இருப்பார்கள் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும்  'BOH' நிறுவனம் சமூக கடப்பாட்டையும் சுற்றுச்சூழலின் உறுதிப்பட்டிற்கு இணங்க, மறுசுழற்சி செய்யக்கூடிய உணவு தர காகித கோப்பைகளில் தேநீரை வழங்கவுள்ளனர். 

அப்பகுதியின் தூய்மையைப் பராமரிக்கவும் நிகழ்வுக்கு பின்பு மறுசுழற்சி முயற்சிகளை எளிதாக்கவும் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் குப்பை சேகரிப்பு தொட்டிகளில் கோப்பைகளை முறையாக வீச வேண்டுமென பொதுமக்களையும் பக்தர்களையும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டது 'BOH' நிறுவனம்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement