வாலிபனை திருடன் என பழித்ததால் குடும்ப மாது கற்பழித்துக் கொலை!


மத்தியப்பிரதேசம் இந்தியா, பிப்,5-
கைத்தொலைபேசியைத் திருடிய பழிச்சொல்லுக்கு ஆளான வாலிபன் ஒருவன் வஞ்சம் தீர்க்கும் விதமாக வெகுநாட்கள் காத்திருந்து குடும்ப மாது ஒருவரைத் துன்புறுத்தி கற்பழித்துக் கொலை செய்துள்ளான்.

இந்த திடுக்கிடும் வெரிச்செயல் மத்திய பிரதேசத்திலுள்ள ரேவா மாவட்டத்தைச் சார்ந்த கைலாசபுரி கிராமத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி நடந்ததாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் பேச்சாளர் உறுதிபடுத்தினார்.

இந்த சம்பவத்தினால் 58 வயது திருமணமான அந்தக் குடும்ப மாது சம்பவம் இடத்திலேயே இறந்துவிட்டார்.

சுமார் 16 வயதுமிக்க இந்த வாலிபன் இறந்த அப்பெண்னால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைத்தொலைப்பேசியைத் திருடியதாக தம் மீது  பழி சுமத்தியதால் தாம் பெரும் அவமானத்திற்கு ஆளானதாக அந்த வாலிபன் போலிசாரிடம் பிடிப்பட்டதும் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளான்.

போலீசார் கூறுகையில், சம்பவத்தின்போது கணவனும் மகனும் வெளியே சென்றுவிட்ட நிலையில் அம்மாது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட அந்த வாலிபன் வீட்டினுள் புகுந்து அந்த மாதுவின் வாயில் துணியையும் நெகிழி பையையும் திணித்து அவளை வீட்டின் பின்புறத்திற்கு கொண்டு சென்றுள்ளான். பிறகு அங்கு அம்மாதுவைத் துன்புறுத்தியது மடுமல்லாமல் கற்பழித்துள்ளான்.

இருப்பினும் கோபம் தனியாத அந்த வாலிபன் தான் செய்த அக்குற்றத்தை மறைப்பதற்காக அம்மாதுவை அரிவாளைக் கொண்டு தலையிலும் உடம்பிலும் தாக்கியுள்ளான்.

அந்த வாலிபனின் கொடூரச் செயலால் பலத்த காயங்களுக்குள்ளான அம்மாது சம்பவம் நடந்த இடத்திலேயே மாண்டார்.

பிறகு தலைமறைவான அவ்வாலிபன் இறுதியில் போலிசாரால் வலைவீசித் தேடப்பட்டபின் கையும் களவுமாக பிடிபட்டான்.

தற்போது போலிசார் இக்குற்றத்தை தீவீர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement