கோலாலம்பூர், பிப். 16-
15ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், தொகுதியில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற மின்சாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
நேற்று காலை நாடாளுமன்ற கட்டடத்தில் டி.என்.பி. எனப்படும் தேசிய மின்சார வாரியத்தின் மூத்த மேலாளர் அகமட் ஃபாரிட் பின் அப்துல் அஜிசை அவர் நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.
சுங்கை பூலோ தொகுதியில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற மின்சார விநியோகம் உட்பட துறை சார்ந்த நவீன மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து எழும் பிரச்சினைகளுக்கு டி.என்.பி. வாரியத்துடன் இணைந்து தீர்வு காண, தமது அலுவலகம் அவ்வாரியத்துடன் பரஸ்பர தொடர்பில் இருக்கும் என்று டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
டி.என்.பி மின்சார வாரியத்தின் சேவைத்தரம் உயர்ந்த நிலையில் இருந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், நவீன தொழில்நுட்பத்தையும் தனது சேவையில் கையாண்டு வருகின்ற அவ்வாரியத்தின் மிகச் சிறந்த அடைவுநிலை குறித்து அவர் வெகுவாகப் பாராட்டினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks