குப்பைத் தொட்டியில் சிசுவின் சடலம்


செர்டாங் பிப், 7- 
பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் சிசுவின் சடலமொன்று குப்பை வீசும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் இங்குள்ள சமூகக் காப்பகமொன்றின் முன்புறத்தில் அமைந்துள்ள குப்பை வீசும் இடத்தில் நடந்துள்ளது என்று செர்டாங் மாவட்டப் போலீஸ் படைத் தலைவர் உதவி ஆணையர் ஏ.அன்பழகன் உறுதிப்படுத்தினார்.

செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10.05 மணியளவில் செர்டாங் மாவட்ட போலீஸ் தகவல் மையம் பொதுமக்களிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பின் வழி இறந்த நிலையில் சிசுவின் சடலமொன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக புகார் பெறப்பட்டது.

இந்த தகவலைத் தொடர்ந்து, போலீஸ் குழுவொன்று சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது. அங்கு, பிறந்து சில நாட்களே ஆகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் அந்த குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது. அக்குழந்தை ஆரஞ்சு நிற கைப்பையில் வைக்கப்பட்டு ஒரு பெட்டிக்குள் போடப்பட்டிருந்தது.

அங்கு காலை வேளையில் 9.30 மணியளவில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஊழியர் ஒருவர் லெஸ்தாரி பெர்டானா 1 இல் அமைந்திருக்கும் சமூகக் காப்பகத்தின் எதிரேயுள்ள குப்பைத்தொட்டியில் சந்தேகிக்கும் வகையில் இருக்கும் அக்கைப்பையைத் திறந்து பார்த்ததும் உள்ளே குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.

போலீஸ் ஆய்வாளரும் அங்கு விரைந்த மருத்துவ அதிகாரியும் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சவப்பரிசோதனைக்காக தற்போது அந்த பெண் சிசுவின் சடலம் செர்டாங் அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அன்பழகன் மேலும் கூறினார்.

போலீஸ் தற்போது விசாரணை முடக்கிவிட்டுள்ளதோடு, அந்த மனிதாபிமானமற்ற குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரியவரை தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக அன்பழகன் தெறிவித்தார்.

மேலும் இச்சம்பவம் பற்றி ஏதேனும் தகவலுடைய பொதுமக்கள் விரைந்து போலீசாரிடம் தகவல் பகிர்ந்து விசாரணைக்கு உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement