கள்ளத்தொடர்பால் இந்திய பிரஜை கழுத்தறுத்துக் கொலை - ஐவருக்குத் தடுப்புக்காவல்


சிலாங்கூர் பிப்,5-
சகநாட்டவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த ஆடவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு பின்பு புதைக்கப்பட்ட கோரச் சம்பவத்தில் கள்ளக்காதலி மற்றும் அவளது கணவன் உட்பட ஐவர் ஒன்று முதல் 11 நாட்களுக்கு விசாரணைக்காக போலீஸ் தடுப்புக்காவலில. வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் படைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷினர் வான் அஸ்லான் வான் மாமாட் இன்று தொடர்பு கொண்டபோது அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கைது செய்யப்பட்ட இறந்த ஆடவரின் கள்ளக்காதலியுடைய கணவனும் மற்றும் சக நாட்டு ஆடவரும் ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு போலிசாரால் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இக்கொலைச் சம்பவத்தின் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இறந்த ஆடவரின் கள்ளக்காதலி மற்றும் ஓர் மலேசிய இந்தியப் பெண்மணி, இந்தோனேசிய பெண்மனி உட்பட மூன்று பெண்களும் பிப்ரவரி 4 முதல் நாளை திங்கட்கிழமை பிப்ரவரி 6ஆம் திகதி வரை விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று மாலை சுமார் 4.15 மணியளவில் இக்கொலை தொடர்பாக புகாரைப் பெற்றனர்.

ஆடவர் ஒருவர் தமக்கு அறிமுகமான இந்திய நாட்டைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் தம் சக நாட்டவரைக் கொலை செய்து சடலத்தை புதைத்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவித்ததாக வான் அஸ்லான் கூறினார்.

பிறகு போலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்படி சம்பந்தப்பட்ட கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவ்வடவர் மற்றும் மற்றொரு வாலிபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அந்த சந்தேகத்திற்குரிய நபரிடம் விசாரித்தபோது அந்நபர் தன் சக நாட்டவரைக் கொலை செய்த இடத்தையும் பின்பு சடலத்தைப் புதைத்த இடத்தையும் காட்டினார்.

போலிசார் மேற்கொண்ட அடுத்தக்கட்ட விசாரணையில் அக்கொலைச் சம்பவம் சுபாங் ஜெயாவில் உள்ள முதியோர் காப்பகமாகச் செயல்பட்டுவரும் ஓர் வீட்டில் அரங்கேரியுள்ளது.

கொலைச் செய்யப்பட்ட ஆடவரின் சடலத்தை சந்தேகிக்கப்படும் ஆடவர் முதியோர் இல்லத்தின் பின்புறத்தில் உள்ள மலைச்சரிவில் புதைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டான்.

சுபாங் ஜெயா குற்றப்புலனாய்வுப் படை மற்றும் சிலாங்கூர் மாநில காவல் படையின் தடவியல் நிபுணர்கள் கொலையுண்ட ஆடவரின் சடலத்தை மடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட நெகிழி பையைக் கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 3ஆம் திகதியன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சுபாங் ஜெயா குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலிசார் இறந்த ஆடவரின் கள்ளக்காதலி என்று சந்தேகிக்கப்படும் இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் உட்பட 25 முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களை விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்தனர். இவர்களில் ஓர் இந்தோனேசிய பெண்மனியும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் அந்த முதியோர் காப்பகத்தின் பணியாளர்கள் ஆவர். மேலும் எந்த ஒரு குற்றப் பின்னனியும் கொண்டிருக்கவில்லை என்று போலிஸ் தெரிவித்தது.

தற்போது இக்கொலை சம்பவம் செக்‌ஷன் 302 குற்றப்பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

போலீசார் மெற்கொண்ட தொடர் விசாரணையில் முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அவ்வாடவர் இறந்த சக நாட்டு வாலிபரும் தமது மனைவியும் 6 மாதமாக கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளதைத் தெரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற சந்தேக நபர் மனைவியின் கள்ளக்காதலனை கடந்த மே மாதம் 2022 ஆண்டில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைச் செய்து முதியோர் இல்லத்தின் கொல்லை புறத்தில் உள்ள மலைசரிவில் பிணத்தைப் புதைத்ததாக போலிஸ் விசாரணயில் ஒப்புக்கொண்டுள்ளார்.

துரித விசாரணை மேற்கொண்டபோது, கடந்த மே மாதம் முதல் மகனைத் தொடர்புக்கொள்ளாமல் போனதால் சந்தேகித்த இறந்த ஆடவரின் குடும்பத்தினர் மலேசியாவிலுள்ள இந்திய உயர் ஆனையத்துடன் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர்.

பிறகு இந்திய தூதரகத்திடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கிய சில மாதங்களில் காணாமல் போன அந்த ஆடவர் கொலை செய்யப்பட்டுள்ளது பொது ஆடவரின் மூலம் நிர்மூலமாகியுள்ளது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement