சென்சர் இல்லா முத்தக் காட்சி : முகம் சுழிக்க வைக்கும் கலைஞரின் லீலை !


கோலாலம்பூர், பிப். 23-
மலேசிய தமிழ் சினிமா கலைஞர்களின் பாடல்கள் சமீபக் காலமாக சர்ச்சைக்குள்ளாகிறது. அந்த வரிசையில் சஞ்ஜய் யோ அண்மையில் வலையொளியில் வெளியிட்ட  உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள தனிப்பாடலான "இதயத்தில் ஹிதாயா" இணைய வரிசைகளிலும் வலையொளியிலும் வெளியீடு கண்டது.

இப்பாடலில் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளும் சற்று ஆபசாமாகவே காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டப்போது, நான் புதிதாக ஒன்றும் செய்யவில்லை எனக்கு முன்பே பி.ஜி.டபள்யூ என்கிற பாலகணபதியின் தேன் நிலா காணொளிப் பாடலில் இதை விட ஆபாசமாக  காணொளியாக்கியுள்ளார்கள். 

Click Here for the Video Preview 

நான் அவர்களை காட்டிலும் சற்று குறைவாகவே காட்டியுள்ளேன் என்று "இதயத்தில் ஹிதாயா" காணொளிப் பாடலின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்ஜய் யோ குறிப்பிட்டார். 

மலேசியாவைப் பொருத்தமட்டில் இதுபோன்ற காட்சிகளுக்கு அவசியம்தானா என்ற கேள்வியும் பாடலில் சில காட்சிகள் முகம் சுழிக்கவும் வைக்கின்றன. 

காணொளி பாடலின் காட்சிகள்

இப்பாடலை கோமளா மற்றும் கேதனா இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை சஞ்ஜய் யோ   எழுதியுள்ளார். எம் ஜெகதீஸ் இந்த பாடலுக்கான இசையை அமைத்துள்ளார். 

காணொளி பாடலின் காட்சிகள்

மேலும், இந்த சர்ச்சைக்குள்ளான காணொளி பாடலில் இயக்குனரும் கதாநாயகருமான சஞ்ஜய் யோ மற்றும் கதாநாயகியாக புதுவரவான புவனேஸ்வரி நடித்துள்ளனர்.



இப்பாடலை நீங்கள் பார்வையிட்டிருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

Thanks

Paid Advertisement

Paid Advertisement