ஏமி சியின் ஹிப் ஹொப் தமிழச்சி



கோலாலம்பூர், பிப். 16-
ஸ்பைடர் சென்ஸ் ஸ்துடியோ வழங்கும் ஹிப் ஹொப் தமிழச்சி தனி காணொளி பாடல் மார்ச் மாதம் வலையொலியில் வெளியீடு காணவுள்ளது. 

தண்டவம் தனிப்பாடலுக்குப் பிறகு சுதந்திர பாடகியான ஏமி சி ஹிப் ஹொப் தமிழச்சி பாடலின் வழி மீண்டும் இசைத்துறையில் தடம் பதிக்கிறார். பண்முக கலைஞரான ஏமி சி தனது அடுத்த படைப்பான ஹிப் ஹொப் தமிழச்சி பாடலிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது இவர் வெண்பா திரைப்படத்தில் தண்டாயுதபாணியே பாடல் வழி மலேசிய சினிமாத்துறையில் அறிமுகமானார். 

இந்த பாடலில் உள்ளூர் பாடகியான ஏமி சி எழுதி, பாடி, இசையமைத்து மற்றும் இயக்கியுமுள்ளார். பாடலின் மிக்ஸ் மாஸ்டர் கே.எம்.ஜி கிட்ஸ் சினு 
செய்துள்ளார். 

சென்னையில் காணொளி படப்பிடிப்பின்போது


பாடலுக்கான ஒப்பனை மெராக்கி மைக் ஒவர்ஸ் செய்துள்ளது. மார்ச் முதல் ஹிப் ஹொப் தமிழச்சி வலையொளியில் அதிர்வை ஏற்படுத்துவதை எதிர்பார்க்கலாம்.

இப்பாடலின் சிறப்பம்சங்கமாக இரு நாடுகளில் ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளின் மாறுபாடுகளை பாடமாக்கியுள்ளார். இப்பாடலுக்காக தனியாகவை பயனித்தும் இயக்கியுமுள்ளார் ஏமி சி. இந்தியாவின் கணொளிக் காட்சிகளின் படப்பிடிப்புகளை முழுக்க முழுக்க இந்தியாவின் தொழிற்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு செய்துள்ளார்.

கருத்துகள்

கருத்துரையிடுக

Thanks

Paid Advertisement

Paid Advertisement