லங்காவி, பிப்,11-
விமானப்பணியில் இளைஞர்களுக்கு ஆர்வமுட்டும் வகையில் அவர்களுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மெரிட்டஷ் கல்லூரி மாணவர்களின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் அண்மையில் மஹ்சூரி இடைநிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 19 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட ஏ.ஆர். எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்தின் ஆதரவில், ஹெளாங் திட்டத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனர்.
இந்த ஒரு நாள் சுற்றுலா மெரிட்டஷ் கல்லூரி இளங்களை பட்டபடிப்பில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து சிறப்பாக நடந்தேறியது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அம்சங்களில் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டும் ஒரு தளமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹெளாங் திட்டத்தில் விமானத் துறையைச் சார்ந்த பல யுக்திகள் மற்றும் கலைகள் மாணவர்களுக்கு விளக்கங்களுடன் பகிரப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் விமானியாக உருவாகுவதற்கான தூண்டுதலையும் அவர்களுக்கான ஆர்வத்தை பிரதிபலிக்கும் விதமான பல பயிற்சிகளும் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
மெரிட்டஷ் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந்த பயிற்சியில் மஹ்சூரி இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் விமான உருவாக்கம் தொடர்பான பல தகவல்களையும் வழிமுறைகளையும் எளிதாக கற்றுக்கொண்டனர்.
மேலும், மலேசியாவின் முதன்மை விமானப் பயிற்சி கலைக்கூடமான ஹ்ம் விண்வெளி நிலையத்தையும் பார்வையிட்டனர்.
விமானத்துறை பயிற்சியில் பெற்ற திறன்களும் விமானப் பயணத்தின் மீதான ஆர்வத்தையும், அனுபவத்தையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டதிக் மகிழ்ச்சியாகவுள்ளது. நாங்கள் கற்ற பாடத்தை வருங்கால இளைஞர்களுடன் பகிர்வதில் எங்களுக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.
இந்த கல்வியே அவர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிறைய புதிய அனுபவங்களைப் பெறவும், பல்வேறு நாடுகளுக்கும் செல்ல முடியும் என்று ஹெலாங் திட்டத்தின் ஹாரிஸ் ஹிடாயாத்துல்லா பின் முகமட் ஹானிக்கி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு வெற்றி அடைவதற்கு பெரும் பங்காற்றிய ஏ.ஆர். எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்திற்கு எங்களின் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks