பத்துமலையில் வரலாறு காணாத பக்தர்கள் வெள்ளம் !



சிலாங்கூர் பிப்,5 -
இவ்வாண்டு பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருத்தலத்தில் கொண்டாப்படும் 133 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் வரலாறு காணத பக்தர்கள் கூடினர்.

கோரணி நற்ச்சின் காரணமாக  இரண்டு  ஆண்டுகள் கட்டுப்பாட்டுக்குப் பிறகு இம்முறை விதிமுறைகள் தளர்த்தபப்பட்டு தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

இதன் எதிரொலியாக இம்முறை தைப்பூசத்திருவிழாவின்போது ஆலயத்தில் மக்கள் கூட்டம் புற்றீசல் போல அலை திரண்டது. 



பத்துமலை முருகப்பெருமான்  வள்ளி தெய்வானை தம்பதிகளாய் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் புடை சுழ வெள்ளி இரதத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தாய்க்கோவிலான துன் எஹ். எஸ். லீ ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து பத்துமலை நோக்கி புறப்பட்டது.  

சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் வெள்ளி இரதம்6 பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்ததும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. 

பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஆலயத்திற்கு திரண்டனர். தைப்பூச பெருவிழா தொடக்கத்தை அறிவிக்கும் விதமாக ஆலய நிர்வாகம் சேவல் கொடியேற்றினர். 

நள்ளிரவு தொடங்கியதும், நூற்றுக்கணக்கான காவடிகளும் பால்குடம் ஏந்திய பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 


முருகப்பெருமானைக் கொண்டாடும் விதமாக கண்கவர் மயில் காவடிகள் ஆலயத்தில் சூழ்ந்திருந்தன. இதனை கண்டு பொதுமக்கள் ஆனந்த வெள்ளத்தில் முழ்கினர். 

இத்திருநாளின் சிறப்பு அம்சமாக ஶ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருபுகழ் பாடல்கள் தொகுப்பு எளிய உரைநடையில் புத்தக வடிவில் ரிம். 20க்கு பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மஇகாவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோஶ்ரீ மு. சரவணன் இந்த பக்தி நூலைப்பற்றி விளக்கவுரை அளித்தார்.  

முருகனின் திருபுகழையும் அதன் மாண்பையும் அடுத்த தலைமுறையினர் படித்து நமது சமயநெறியை பின்பற்றி பயன் பெறும் நோக்கத்திற்காக வெளியிடப்பட்டது. 



தைப்பூசத்திற்கு வருகைத்தரும் பக்தர்களுக்காக தகவல் மையம் 24 மணிநேர சேவையில் ஈடுப்பட்டிருக்கிறது. 

பிறகு, 133வது தைப்பூசத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக வெளிநாடுகளிலிருந்து 8 பாடகர்கள் தருவிக்கப்பட்டு பத்துமலைத் திருத்தலத்தில் முருகனின் பக்தி பாமாலைகளை பாடி வந்திருந்த பக்தர்களை பக்திக் கடலில் மூழ்கடித்தனர். 

மேலும், இவ்வாண்டு தைப்பூசத்திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் எவ்வித அசம்பவிதங்களும் நடக்காமலிருக்க 1800 காவல் படையினர் தங்களின் 24 மணிநேர சேவையில் ஈடுப்பட்டுள்ளனர். 

முன்னதாக சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் ஆகியோர் ஆலயத்திற்கு வருகையாளித்து சிறப்பித்தனர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement