மது போத்தலை வீசிய சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட எழுவர் கைது

 

கோலாலம்பூர் பிப், 5- 
நேற்று இங்குள்ள ஓர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஆடவர் ஒருவர் மது போத்தலை அருகாமையில் உள்ள நெரிசலான சாலையை நோக்கி வீசிய சம்பவத்தில் வலை வீசி தேடப்பட்டுவந்த சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் ஆடவர் போலீசிடம் பிடிபட்டார்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல அந்த நபர் உட்பட மொத்தம் எழுவர் இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பான கானொளி ஒன்று டிக்டாக் சமூக ஊடகத்தில் பரவியதைத் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

முதல் கட்ட சோதனையின் வழி போலிஸ் படையினர் இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அந்த ஐவரில் இருவர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதை டாங் வாங்கி மாவட்ட போலிஸ் படைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷினர் நூர் டெல்ஹான் யாஹயா இன்று உறுதிப்படுத்தினார்.

மேலும், முதல் கட்ட சோதனையின் வழி போலிசார் அந்த ஐந்து ஆடவர்களை சனிக்கிழமை சுமார் பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 9.15 மணியளவில் டாங் வாங்கி குற்றபுலனாய்வுப் பிரிவு சிறப்புப் படையினர் கைது செய்தனர்.

அந்த ஐவரில் மூவர் 21 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் இதர இரு பெண்கள் 23 வயதுடையவர்கள் என்று நூர் டெல்ஹான் மேலும் கூறினார்.

தற்பொழுது அந்த ஐந்து பேரும் போலிஸ் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முதல் ஐவர் கைது செய்யபட்டதைத் தொடர்ந்து போலிஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மணி 1.30 முதல் 2.15 இடைப்பட்ட நேரத்தில் மற்றுமொரு சோதனையின் வழி மேலும் இரு ஆடவர்களைக் கைது செய்தனர்.

கைதான அவ்விருவரும் 20 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிடிபட்ட அந்த ஏழு ஆடவர்கலிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் வழி சம்பவத்தின்போது பயன்படுத்தியதாகக் சந்தேகிக்கப்படும் ஒரு கைத்தொலைபேசி மற்றும் ஒரு ஜோடி உடைகள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, அந்த எழுவரில் முக்கிய குற்றவளி உட்பட இருவர் மட்டுமே விசாரணைக்காக இன்று முதல் வரும் பிப்ரவரி 7 வரை மூன்று நாட்களுக்கு தடுப்புகாவலில் வைக்க அனுமதி பெறப்பட்டது.

இதர ஐவருக்கும் தடுப்புக்காவல் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்குமூலம் பெறப்பட்டபின் போலிஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவர் என்று நூர் டெல்ஹான் குறிப்பிட்டார்.

அவர்கள் அனைவரும் தற்போது செக்‌ஷன் 268, 336 குற்றவியல் பிரிவு மற்றும் 1955 வருடம் செக்‌ஷன் 14 சிறு குற்றப்பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

மேலும், அவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிருநீர் சோதனையின் போது முக்கிய குற்றவாலியாகக் சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் மட்டுமே கெத்தாமின் வகை போதைப்பொருள் உட்கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வடவர் தற்போது செக்‌ஷன் 15(1) (a) போதைப்பொருள் அபாயகரச் சட்டம் 1952 கீழ் விசாரிக்கப்படுகிறார்.


கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement