அறிவகம் ஏற்பாட்டில் இரத்த தானம் : 100பேர் உதிரம் வழங்கினர்


பூச்சோங், பிப் 14-
அண்மையில் அறிவகம் ஏற்பாட்டில் இரத்த தானம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. 

இதில் 100 பேர் உதிரம் வழங்கி சிறப்பித்தனர். லோட்டஸ் பூச்சோங் (டெக்கதோன் அருகிலுள்ள பேரங்காடியில் காலை மணி 11 முதல் மாலை 5 மணி வரையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது.

அறிவார்ந்த தமிழ் மாணவர்கள் இயக்கம் (அறிவகம்) முழுக்க முழுக்க தமிழ் சார்ந்த அமைப்பு மட்டுமல்லாமல் இளைய பட்டதாரி மாணவர்களின் முயற்சியில் நம் கலை, மொழி, சமூகம் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த சமுக சேவைகளையும் நிகழ்வுகளையும் சிறப்பாக பங்காற்றி வருகின்றனர். 

இச்சங்கம் 2016 ஆம் ஆண்டு கல்விச்சார்ந்த விடயங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது. பின்பு சமூகம் சார்ந்த சார்ந்த சேவைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்துரையிடுக

Thanks

Paid Advertisement

Paid Advertisement