கோலாலம்பூர், ஜன 25-
தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றது. தற்போது இந்நிறுவனம் தனது கவனத்தை தமிழ் திரையுலகம் பக்கம் திருப்பியுள்ளது.
“வடக்குப்பட்டி ராமசாமி” என்ற தலைப்பில் புதிய தமிழ் திரைப்படத்தின் வழி இந்த தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகத்தில் களமிறங்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழு.
டிக்கிலோனாவிற்கு பிறகு மீண்டும் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் களமிறங்கியுள்ளார்.
"எனக்கு கவுண்டமணி சார்ரோட நகைச்சுவை மிகவும் பிடிக்கும். கவுண்டமணியின் மறக்கமுடியாத பல பாத்திரங்களில் வடக்குப்பட்டி ராமசாமியும் ஒன்று. இத்திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ராமசாமி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
டிக்கிலோனா போன்று இந்த திரைப்படமும் காலத்தை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான். 1960-70களில் ஒரு கிராமத்தில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவத்தை கொண்டு திரைக்கதை அமைந்துள்ளது.
குறிப்பாக ராமசாமி என்றாலே தமிழர்கள் மத்தியில் அடையாளம் பொறித்த தமிழ் பெயராகும். அது பல அலைகளை உருவாக்குகின்றது. நாங்கள் அதற்காக அந்த பெயரிலுள்ள அர்த்தங்களை ஆராய்ச்சி செய்தோம். இந்த கதாப்பாத்திரம் நவீன கலாச்சாரத்தில் ஒரு உன்னதமான இடத்தை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வடக்குப்பட்டி ராமசாமியை உலகில் உள்ள அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இது ஒரு நகைச்சுவை படமாகவும் 90களிலுள்ள காமெடிகளைப்போல நடைமுறை காலத்திற்கு ஏற்ப திரைக்கதை அமைந்துள்ளது என்று இயக்குனர் கார்த்திக் யோகி தெரிவித்தார்.
ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசையை ஜெய் பீம் புகழ் சியொன் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு வடக்குப்பட்டி ராமசாமியில் பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் ஒளிபதிவை டிப்பாக் செய்வதாக இயக்குனர் கார்த்திக் யோகி தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks