ஏ.ஆர். ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் சித்தி நூர்ஹாலிசா


கோலாலம்பூர் ஜன, 24-

நம் நாட்டின் பிரபல பாடகியான சித்தி நூர்ஹாலிசா ஆஸ்கார் நாயகனோடு இணைவதில் பெருமிதம் கொள்வதாக தனது படவரி பக்கத்தில் அறிவித்துள்ளார்.

"இவ்வருடத்தின் தொடக்கத்தில் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதற்கான அழைப்பு மின்னஞ்சல் வழி கிடைக்கப்பெற்றது". "என் பலநாள் கணவு என்பதால் நான் அதிகம் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தேன்". "உங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்புக்கு நான் நன்றிகடன் பட்டுள்ளேன் ஏ.ஆர்.ரஹ்மான் என நாட்டின் புகழ்பெற்ற பாடகியான சித்தி  நூர்ஹாலிசா தனது படவரியில் பதிவு செய்துள்ளார்.

டி.எம்.ஒய் ஏற்பாட்டில் வருகின்ற ஜனவரி 28 நடைபெறவுள்ள ஆஸ்கார் நாயகனின் நேரடி கலை நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது. 


படவரி பதிவு : https://www.instagram.com/reel/CnwpkphBOrX/?igshid=MDJmNzVkMjY%3D

இந்த கலை நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் இந்திய இசை கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர்.  டி.எம்.ஒய். நிறுவனத்தின் மிக பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு அமையவுள்ளது. இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஏ.ஆர். ரஹ்மானின் 30வது ஆண்டைக் கொண்டாடும் நிகழ்வாகவும் இந்த பிரம்மாண்டமான இசை கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Click Image for the Ticket Site

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement