கோலாலம்பூர், ஜன 23-
மலேசியாவில் வித்திட்ட இவ்வாண்டிக்கான மலேக் ஸ்டிரிம்ஸ் நிறுவனத்தின் முதல் இசை கலை நிகழ்ச்சியின் வழி மலேசியா இரசிகர்களை முழுமையாக கவர்ந்துள்ளார் தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
புக்கிட் ஜாலில் அஸியாத்தா அரங்கில் நடைபெற்ற "ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்" இசை கலை நிகழ்ச்சி மதியம் 6.30 மணியாளவில் தொடங்கி உள்ளூர் கலைஞர்கள் டிஜே தேவ், டிஜே தாஸ், டார்க்கி, டாக்டர் பெர்ன், கவிதை குண்டர் எம்சி ஜெஸ், சைக்கோ மந்திரா மேலும் உள்ளூர் நடனக்கலைஞர்களோடு இசை நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கியது. அவர்களை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சி புகழ் பிரியங்கா, மா கா பா மற்றும் புகழ் மேலும் நிகழ்ச்சியை மெருகூட்டினர்.
இந்நிகழ்வுக்கு மஇகா தேசிய துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மு. சரவணன் மற்றும் நாட்டின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். தென்னிந்திய திரைப்பட முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே முதல் டி லெஜண்ட் வரையுள்ள 39 புகழ்பெற்ற பாடல் மற்றும் நேரடி இசை வழி அரங்கை இசை வெள்ளத்தால் முழ்கடித்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
மேலும், இதில் பின்னணி பாடகர்களான கார்த்திக், ஆண்ட்ரியா, பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஹாரிச்சரன், ஸ்ரீநிஷா, கிரிஸ், ஸ்ரீதர் செனா , சைந்தவி, சர்மிளா, விஷ்ணுப்பிரயா, ஹாரிபிரியா, திவாகர், சமுவேல் நிக்லோஸ் ஜெயராஜ் ஆகிய பாடகர்கள் கலந்துச் சிறப்பித்தனர்.
இதற்கிடையில், ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் கலை நிகழ்ச்சியை நடத்திய மாலிக் ஸ்டிரிம்ஸ் மற்றும் எம்.எஸ் கோல்ட் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதம் சென்னையிலும் மே மாதம் இலண்டனில் இந்த இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதிலும் உள்ளூர் கலைஞர்கள் பங்குக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks