என்னுடைய இசைத்துறையில் மலேசியா ஒரு முக்கிய அங்கம்! - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்




கோலாலம்பூர் , ஜன 19-
மலேக் ஸ்டிரிம்ஸின் இவ்வாண்டிற்கான முதல்   'ஹார்ட் ஆஃப் ஹாரிஸ்"  இசை கலை நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக புக்கிட் ஜாலில், அஸியாத்தா அரங்கில் நடைபெறவுள்ளது. 

மலேசியா எனது வாழ்க்கையில் முக்கிய இடத்தை எப்போதும் வகித்து வருகிறது. பிரபலமான பாடல்களான மின்னலே, மஜ்னு , போன்ற திரைப்படங்களின் பாடல்கள் இங்குதான் இசையமைக்கப்பட்டது. உலக அரங்கில் ஒரு இசையமைப்பாளராக அடையாளம் காட்டியது மலேசியாதான் என்று மனம் நெகிழ்ந்தார் தென்னிந்திய திரைப்பட முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ். 

மலேசியாவில் முதல் முறையாக நடைப்பெறும் இந்த கலை நிகழ்ச்சி முழுக்க முழுக்க என்னை உயர்த்திய மலேசிய இரசிகர்களுக்கு நான் வழங்கும் இசை விருந்தாக அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 



தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சினிமா இசைக்களைஞர்களோடு நடைப்பெறுகிறது.  இதில் பின்னனி இசை பாடகர்கள் ஹரிசரண், பென்னி தயாள், விஜய் பிரகாஷ், கார்த்திக், கிரிஷ், ஸ்ரீதர் சேனா, திவாகர், ஆண்ட்ரியா ஜெர்மியா, சைந்தவி, ஹரி பிரியா, விஷ்ணு பிரியா, ஸ்ரீநிஷா, ஷர்மிளா மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் ஜெயராஜ். 

உள்ளூர் கலைஞர்களில் கவிதை குண்டர் எம்சி ஜெஸ், டார்க்கி , அர்விந்த் ராஜ், டாக்டர் பெர்ன், டிஜே ஜெய், டிஜே தாஸ் போன்ற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய இசை நிகழ்வு இந்த கலை நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக அமையவுள்ளது. 

மாலை 6 மணியாளவில் தொடங்கவுள்ள இந்நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி புகழ் பிரியங்கா, புகழ் , மா கா பாவின் அங்களை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நகரும் என்று தலைநகரிலுள்ள பார்க் ரோயல் ஹோட்டலுல் 'ஹார்ட் ஆஃப் ஹாரிஸ்' கலை நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோ மாலிக் குறிப்பிட்டார். 

மாலிக் ஸ்டிரிம்ஸின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நமது உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு  வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது. இம்முறை உள்ளூர் நடனக்கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 


ஹார்ட் ஆஃப் ஹாரிஸ் கலை நிகழ்ச்சி மலேசியவில் மட்டுமல்லாமல் சென்னை, லண்டன் அகிய நாடுகளில் இவ்வாண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

"எனக்கு பிடித்த இசையமைப்பாளர் என்பதை விட அவருடைய இசை அழுமை மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் நம் நாட்டில் அதிகமான ஹாரிஸ் ஜெயராஜ் இரசிகர்கள் இருக்கின்றனர். ஆகேயால் இம்முறை ஹாரிஸ் ஜெயராஜின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தோற்றுனர் டத்தோ மாலிக் தெரிவித்தார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement