சபா சரவாக் மாநிலங்களுக்கு 1 பில்லியன் - குனாக் சட்டமன்ற உறுப்பினர் வரவேற்பு


கோலாலம்பூர் ஜன, 25-
அண்மையில் சபா சரவாக் மாநிலத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான சிறப்பு நிதியாக ரிம 1 பில்லியன் வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு குனாக் சட்டமன்ற உறுப்பினர் நோராஸ்லினா அரிப் தனது நன்றியினை செய்தி அறிக்கை வழி தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிதியின் வழி அதிரடி மேம்பாட்டு திட்டங்களையும் சபா சரவாக் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிக்க உதவும். சபா சரவாக் மாநில மக்களுக்கான சமூக சமூகம் வளர்ச்சிக்காகவும் இந்த நிதி குறுகியகாலத்தில்  பெரும் பங்காற்றும் என அவர் குறிப்பிட்டார். 

இதேவேளையில், இந்த முயற்சியின் வழி இந்தோனேசியாவின் புதிய நகரமாக அமையவுள்ள கலிமன்தான் - மலேசியா எல்லை பகுதி பாதுகாப்பு மேலும் வலுப்படுத்த உறுதுணையாக அமையும். 

மலேசியா - இந்தோனேசியா எல்லை பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு சமூக பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த நிதி அதனை களைவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement