தலைநகரில் கார்த்திகீ மோகனாதாசனின் வீணை அரங்கேற்றம்


கோலாலம்பூர் ஆக. 6, 
தமிழர்களின் கலைகளில் ஒன்றான இசைக் கலைகளின் முதன்மையாக விளங்கும் வீணை இசைக்கருவியை தற்போதைய இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

அந்த வகையில் கிள்ளாணிலுள்ள பாயு பெர்டாணவில் அமைந்துள்ள ஸ்ரீ ராகம் வித்யாலயா இசை பயிலரங்கு அதிகமான வீணை மாணவர்களை உலகமுழுவதும் உருவாக்கி வருகின்றார் அதன் வீணை ஆசிரியரும் தோற்றுநருமான மோகனப் பிரியா ஆனந்த். 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்ரீ ராகம் வித்யாலயா இசை பயிலரங்கு தொடங்கப்பட்டு 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு வழிநடத்தி இன்று 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை உருவாக்கி வருகின்றனர்.

மலேசியாவில் மட்டுமல்லாது உலகளாவிய நிலையில் மாணவர்களுக்கு இணையம் வயிலாக வீணை பயிற்று வருகின்றார் வீணை ஆசிரியர் மோகனப் பிரியா ஆனந்த்.

அந்த வகையில் இன்று இங்குள்ள தெம்பல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் மண்டபத்தில் 'வைனிக்கா விஸ்ஹாராதா' கார்த்திகீ மோகனாதாஸ் வீணை அரங்கேற்றம் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. 


ஐயர்லாந்து செர்ந்த கார்த்திகீ மோகனாதாஸ் சிறு வயது முதல் வீணை இசை மீது இருந்த ஆர்வத்தை தன் தாயார் கவனித்துள்ளார். பிறகு அவருக்கான வீணை இசைக்கல்வியை பயில ஆசிரியரை தேர்வு செய்து 9 ஆண்டுகள்
இணையம் வழி வீணை இசையே கற்றப்பின் தன் தாயார் அண்மையில் நீங்கள் மலேசிய சென்று அரங்கேற்றம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் வழி கார்த்திகீ மோகனாதாஸ் மலேசியாவிற்கு வந்து ஒரு வருடக்கலமாக ஆசிரியர் மோகனப் பிரியா ஆனந்த் வீட்டில் தங்கி அரங்கேற்றத்திற்க்கான பயிற்சிகளை முடித்துள்ளார்.

இதற்கிடையில், இவர் இசைத்துறை மட்டுமல்லாது ஒவியக்கலை, ஆடை வடிவமைப்பு மற்றும் சில கலைச் சார்ந்த துறைகளின் பற்றுதல் கொண்டுள்ளதாகவும் கார்த்திகீ மோகனாதாஸ் குறிப்பிட்டார். 

வீணையின் பயின்றப்பின் எனக்கு சோர்வான தருணங்களில் இயற்றும்போது தன்னம்பிக்கையும் புத்துணர்வு ஏற்படும். நம் பாரம்பரிய இசை கலைகளில் ஒன்றான வீணை கற்றதில் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார். 




ஸ்ரீ ராகம் வித்யாலயா பயிலாரங்கில் வர்ணம், கீதம், சுவாரஜோதி, கீர்த்தனை, தியாகராஜா பஞ்சவர்த்தனை கீர்த்தனைகள் என கற்றுக் கொண்டேன் என அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வு முற்றிலும் இலவசம் எனவும் இசை பிரியர்களையும் பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார் கார்த்திகீ மோகனாதாஸ்.



கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement