டத்தோஸ்ரீ மு. சரவணன் பெயரில் கைத்தூய்மி கருவியை மாலிக் ஸ்டிரிம் வெளியிட்டது



மோகன்ராஜ் வில்லவன்
mogan.oliyumoleeyum@gmail.com

முன்று வருடங்களுக்கு பிறகு வெளியீடு கண்ட வலிமை திரைப்படத்தை அஜீத் ரசிகர்கள் மிக விமர்சியாகவும் நற்பணியோடும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


அஜித்குமாரின் 60 ஆவது திரைப்படமான 'வலிமை' இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உலகமுழுவதும் வெளியீடு கண்டுள்ளது. 'வலிமை' திரைப்படத்தை மலேசியாவில் லோட்டஸ் பைவ் ஸ்டார் வெளியீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அஜீத் நற்பணி மன்றம்  மாலிக் ஸ்டிரிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து 'வலிமை' திரைப்படத்திற்கான சிறப்பு காட்சியை புத்ராஜெயா ஐஒஐ ஜிஎஸ்சி திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. 


இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு சிறப்பு பிரமுகராக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ மு. சரவணன் வருகையாளித்தார். அவரை கெளரவிக்கும் வகையில் மாலிக் ஸ்டிரிம் கார்ப்பரேஷன் நிறுவனம் டத்தோஸ்ரீ மு.சரவணன் பெயரிடப்பட்ட கையடக்க கைத்தூய்மி கருவியை வெளியீட்டது. இத்திரைப்படத்தை காண வருகையாளித்த அனைவருக்கும் கைத்தூய்மி கருவியை இலவசமாக வழங்கப்பட்டது.


மேலும், இந்த சிறப்பு காட்சியை காண 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் திரையரங்குகளில் திரைப்படத்தை மகிழ்ச்சியாக காண வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக மலேசிய அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வன் தெரிவித்தார்.


 இந்நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கிய மாலிக் ஸ்டிரிம் குழுமத்தின் தலைவர் டத்தோ மாலிக் அவருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்  அவர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement