மோகன்ராஜ் வில்லவன்
mogan.oliyumoleeyum@gmail.com
புத்ராஜெயா பிப்,27-
அஜீத் குமார் நடிப்பில் வெளியீடு கண்டுள்ள 'வலிமை' திரைப்படத்தின் சிறப்பு காட்சி நிகழ்வில் உதவும் கரங்கள் இயக்கத்திற்கு டத்தோ மாலிக் ரிம. 5000 நன்கொடை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புக் காட்சியை நேரில் பார்க்க வந்த சிறப்பு பிறமுகரான மனதவள அமைச்சரும் மஇகாவின் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் சிறப்புறையில் கூறுகையில், அஜீத்குமார் நற்பணி மன்ற இளைஞர்களின் சேவைகள் வரவேற்ககூடியவை. உங்களால் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். இது போல மற்ற இயங்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட்டால் நம் சமுதாயம் அடுத்தக் கட்டத்திற்கு மேலோங்கும். இளைஞர்கள் தவறான வழியில் செல்லமல் இருக்க இது போன்ற இயங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும் கூறிப்பிட்டார்.
| சிறப்பு காட்சியின் நிகழ்வுகள் |
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ மு. சரவணன் , மாலிக் ஸ்டிரிம் கார்ப்பரேஷன் நிர்வாகி டத்தோ மாலிக் மற்றும் அஜீத் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வம் 'வலிமை' அனிச்சலை வெட்டி சிற்ப்பித்தனர்.
கற்றக் கல்விக்கான வேளையின்மையும் மண அழுத்தம் காரணமாக வழித் தவறி இணைய குற்றச்செயல்களில் இட்டு செல்லும் இளைஞர்களின் கதையை கருவாக கொண்டு 'வலிமை' திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் எச். வினோத்.
| உதவும் கரங்கள் இயக்கத்திற்கு வெ.5 ஆயிரத்திற்கான மாதிரி காசோலை வழங்கியபோது |
தற்போதையச் சுழலில் இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக் கொண்டு இருப்பதையும் அதில் இருக்கும் தந்திரங்களையும் நேர்த்தியாக ஆய்வு செய்து திரைப்படமாக்கியுள்ளார் இயக்குநர். இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் உலகளாவிய அளவில் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் இசையை யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரனின் பின்னனி இசை திரைப்படத்திற்கு மேலும் வழுச் சேர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks