Music Director R.Lawrence's One Merge Production presents KAAVAL 2

இசையமைப்பாளர் லாரன்ஸின் ஒன் மேர்ஜ் தயாரிப்பில் 'காவல் 2'


(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517

'ஒன் மேர்ஜ்' தயாரிப்பில் காவல் முதல் பகுதியைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

நாட்டின் முன்னனி இசையமைப்பாளரும் சிறப்பான பாடல்களை உருவாக்கியவருமான இசையமைப்பாளர் லாரன்ஸ் இராமசாமியின் காவல் தொடரின் 2ஆவது சீஸன் தயாரிப்புப் பணி முடிந்து வருகின்ற ஜனவரி முதல் வாரத்திலிருந்து உள்ளூர் தொலைக்காட்சி டிவி 2இல் ஒளிபரப்பத் தொடங்கவுள்ளது.

இந்தத் தொடரை நாட்டின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் நாகா இயக்கியுள்ளார். குற்றவியல், குற்றச்செயல் விழிப்புணர்வு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் டத்தோ ரசாக், சசிதரன், அகோந்திரன், யாமினி, பால கணபதி வில்லியம் ஆகிய கலைஞர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நாட்டின் பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

லாரன்ஸ் இராமசாமி இத்தொடரின் கதைக் கரு, இசை மட்டுமில்லாது இத்தொடரையும் தயாரித்துள்ளார். இத்தொடரின் நிர்வாக தயாரிப்பாளராக டத்தோ அப்துல் ரசாக் ஏற்றுள்ளார். ஒளிப்பதிவை இர்வான் செய்துள்ளார்.

#Kaaval Official Poster

இளைஞர்கள் தவறான வழியில் செல்வதைத் தடுக்கும் வகையிலும் குற்றங்களுக்கான தண்டனைகளும் இத்தொடரில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது. அதிரடியான காட்சிகளுடன் அரச மலேசிய காவல் துறையின் பங்களிப்பும் சமுதாயச் சீர்கேடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இத்தொடர் நம் சமுதாயத்தினரிடையே குற்றச்செயல் விழிப்புணர்வை ஏற்படுத்த வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடருக்கு அரச மலேசிய காவல் துறையினரும் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சும் உறுதுணையாக இருந்தனர். 'காவல் சீஸன் 2' தொடர் அனைவரையும் கவரும் வகையிலும் சமூதாயக் குற்றச்செயல் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் தொடராக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவே முதன் முதலில் தமிழ் புரொடக்‌ஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 1 மணி நேர தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


                               Article By Yaswini Kanagasabai

One Merge Production proudly presents 'Kaaval 2' after the success of the first season. The season two of this series will be telacasted starting from 2 January onwards at 3.30pm on TV 2. 

This series which will be played for 13 weeks will be telecasted from Monday to Friday. Music Director R.Lawrence who have composed numbers of sensational hit songs is the producer of this Kaaval season 2. 

The shooting progress of this series has been completed and now it is ready to be displayed on our local TV Channel. Besides that, this series also directed by Naga who is known as one of our senior director  in our cinema industry. This series is fully based on the crimes that taking place in our country. Moreover, the main aim of this series is to create social awareness among the public about the crimes happening in Malaysia. 

Series Scenes 

Datuk Razak is playing the lead role in this series whereas Shasi Tharan, Ago, Yaamini and Bala Ganapathi also will be playing the role as cops. The content of the story and music is produced by our music director Lawrence. 

Not only that, Datuk Abdul Razak also known as the executive producer of this series whereas DOP by Irwan. In order to restrain the youngsters from committing themselves in crimes, this series will be helpful to make the youngsters understand well about the punishment given for the respective crimes. 


The punishment for the crimes will be explained briefly in the series. This series which is fully contains action scenes expected that it will be playing a crucial role among our community as it will be helpful in overcoming the crime rate in our country. 

Our Police Department and Ministry of Telecommunication and Information Technology also give full support for this 'Kaaval 2 ' production team. First and foremost, it is known that this is the first time a Tamil series has been given an hour of time allocation per day.

Producer  Lawrence also claimed that he believes that this series will gain full support from the public as its fully into overcoming the crime rates.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement