உள்ளூர் கலைஞர்களுக்குரிய அங்கீகாரம்; மலேசிய இந்திய சினிமா விருது விழா அறிமுகம்!
(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517
உள்ளூர் கலைஞர்களுக்காக முதல் முறை
நடைப்பெறவுள்ள இவ்விருது விழா நம் நாட்டுக் கலைஞர்களுக்கும் அவர்களுகளுடைய
திறமைக்கான அங்கீகாரம் வழங்கும் நோக்கில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.
இவ்விருது விழாவிற்கான இராண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில்
பிரிக்பில்ட்ஸ், ஃபினாஸ் பிட்சிங்
சென்றாலில் நடைப்பெற்றது.
நம் நாட்டுக் கலைஞர்களுக்காக மிகா அவார்ட்ஸ்
பிரைவட் லிமிடெட் ஏற்பாட்டில் “மலேசிய இந்திய சினிமா விருது விழா””””” வருகின்ற 23 ஆம் தேதி அக்டோபர், மாலை 6 மணிக்கு ஷா ஆலாம், தி.எஸ்.ஆர். மாநாட்டு மண்டபத்தில் மிக
பிரம்மாண்டமாக சிவப்பு கம்பள மரியாதையுடன் அரங்கேறவுள்ளது.
முதன் முறையாக நடைப்பெறும் இவ்விருது விழாவில்
கடந்த ஆண்டு 2015ஆம் ஆண்டு வெளியீடு கண்ட 9 மலேசியத் திரைப்படங்கள்
இடம்பெற்றுள்ளன.
நம் உள்ளுர் கலைஞர்களின் அண்மையப் படைப்புகள்
உலக அரங்கில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில் நம் நாட்டில்
அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மிகா தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
“நம் நாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு
அங்கீகாரம் வழங்கும் அதை சமையத்தில் திரைப்படத்துறையில் தங்களை அர்ப்பனித்து
சிறப்பான படைப்பு உருவாக காரணமாக இருக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கும்
தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் மிகவும் முக்கியம் என்பதே நாங்கள்
அறிவோம். இதன் வழி மேலும் பல சிறப்பான படைப்புகள் உருவாக இவ்விருது விழா
வித்திடும் என்று இவ்விழாவின் முதன்மை செயல் முறை அதிகாரி ஆர்.ஜி. நாயுடு
தெரிவித்தார்.
இதனிடையை, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த உள்ளூர் திரைப்படங்கள், குறும்படங்களுக்கான விருதுகள் மிகா விருது
விழாவில் வழங்கப்படவுள்ளது. மலேசியா, இந்தியா, ஸ்ரீலங்கா, ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிக்களைக் கொண்டு
முறையாக இவ்விருதுக்கான படைப்புகளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மிகப் பிரபலமான விருதுகளை பொதுமக்கள்
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்விருதுக்கான வாக்குபதிவு
தற்பொது மிகா அகப்பக்கத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்த விருது வரிசையில் ஒட்லிங் மக்கள் தேர்வு எனும் விருதும்
இணைக்கப்பட்டுள்ளது.
மிகா விருது விழாவின் முதன்மை ஆதரவாளராக
நாட்டின் புகழ் பெற்ற நிறுவனமான என்ரிகோஸ் ஆதரவு வழங்குகின்றனர். மிகா விருது
விழாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாளராக டி.எஹ்.ஆர் ராகா அறிவிப்பாளர் ஆனந்தா, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் தெய்வீகன், உள்ளுர் கலைஞர்கள் ரத்னா, ரினித்தா. விழாவின் சிவப்பு கம்பள
அறிவிப்பாளராக நடிகர் பாலகணபதி வில்லியம், அறிவிப்பாளர் அருணா படைக்கவுள்ளனர்.
இவ்விழாவிற்கு மலேசியத் திரைப்படக்கலைஞர்கள், திரைப்பட தொழிற்நுட்பக் கலைஞர்கள் சார்ந்த
பல்வேறு இயக்கங்கள், நிறுவனங்கள், கலைத்துறை நிபுணத்துவர்கள், இந்திய வர்த்தகர்களென தங்களது வற்றாத ஆதரவை
மிகா விருது விழாவிற்கு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் விருது மட்டுமில்லமல் ரவ்லேசியா
முத்து மாளிகையின் ரிம. 70, 000 மதிப்புள்ள முத்து ஆபரணங்கள் தேர்ந்தெடுக்கபட்ட சில விருதுகளுக்கு
வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, ஆஸ்கார் ஹாலிடே வழங்கும் 6 விமான டிக்கெட்டுகளும் வழங்கப்படவிருகின்றன. இதில், துபாய், சென்னை, கொழும்பு, சென்று வர இருவழிப்பயன டிக்கெட்டுகளை
வழங்கவுள்ளனர்.
ஆகவே, இவ்விருதை நேரில் கண்டுகளிக்கவும் மலேசிய சினிமாத்துறையில் வளர்ச்சியில்
அக்கறைக் கொண்ட அனைவரும் இவ்விருது விழாவிற்கான டிக்கெட் வாங்கி நேரில் வந்து
கலைஞர்களை வாழ்த்திச் செல்லுமாறு இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினார் கேட்டு
கொண்டனர்.
மிகா விருது விழாவின் டிக்கெட்டுகள் தற்பொழுது
விற்பனையில் உள்ளது. ரிம.50, ரிம.100, ரிம.500 வெள்ளி
பெறுமானமுள்ள டிக்கெட்டுகளைப் பெற +60192240999 எனும் எண்ணுடன் தொடர்புக்
கொள்ளலாம்.
இவ்விருதுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்
பட்டியல் இம்மாதம் 19க்கு மேல் மிகா அகப்பக்கத்தில்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று விருது விழாவின் ஏற்பாட்டுக் குழுவினார்
தெரிவித்தனர்.
MICA Awards Honouring Talents of Malaysian Indian Film Industry
Article By Yaswini Kanagasabai
MICA Awards Private Limited
Association is proudly presenting Malaysian Indian Cine Awards exclusively for
our local artists in Malaysia for the first time. In conjunction with that, the
second press conference held at brickfields FINAS Pitching Central recently.
This prestigious event will be held on 23rd December at TSR Conference Hall,
Shah Alam. Not only that, this glamorous event also will be kick started with
the red carpet arrival where the celebrities will be given a royal welcome for
the award ceremony. Lately, our Indian Cinema industry has been flourishing
over a decade of years with tremendous achievements. There are nine local Tamil
movies screened over the last year are up for the nominations this year. MICA 2016 aims to acknowlege and honour the
excellence as well as the hardwork of our local arists in Indian cinema. Aside
from that, this award ceremony also set to honour the production and technical
team in order to encourage them to be a part in enriching our cinema industry
and produce more quality movies.
![]() |
| RG NAIDU JASMIN MICHAEL K.K. KHANNA PUSHPA NARAYAN |
Besides, the juries will be the experts from Malaysia, Singapore, Sri
Lanka and India whereas the public has been given an opportunity to cast their
votes for the Popular Category Awards which are consists of Most Popular Movie,
Most Popular Actor and Actress. At the same time, Hotlink People's Choice award
also will be included in the award ceremony. Enricos company will be one of the
main sponsor of this event whereas THR Raaga's RJ Anantha and Minnal.Fm's RJ
Theyvekgan together with our local artist Ratna and Reneetha will be the
official hosts of this wonderful event. Furthermore, Red carpet arrival will be
hosted by Bala Ganapathy William or well known as BGW and Aruna.
From the day one since the idea has been mooted by the founder
R.G.Naidu, this event has receive tremendous support from various associations,
companies, Indian traders and many others. Whereby, Rafflesia the Pearl Centre
also will be contributing RM 70,000 worth of pearl accessories for selected
award categories. 6 flight tickets will be given away by Oscar Holiday to fly
to Dubai, Chennai and Colombia. Hence, MICA 2016 founder and Chief Executive
Officer R.G. Naidu requesting the public to witness this wonderful and lively
event by purchasing the ticket and come over to congratulate the deserving MICA
award winners for the year 2016.
The organising team also stated that the
chosen winners will be officially announced on 19th December in the
MICA's official webpage. Lastly, RM50, RM100 and RM500 worth tickets for the
award ceremony are on sale now and those who wished to grab the tickets please
do not hesitate to contact +6019-2240999.



கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks