MICA Awards Private Limited Association is proudly presenting Malaysia Indian Cine Awards exclusive

அறிமுகமாகின்றது மலேசிய இந்திய 

சினிமா விருது விழா (மிகா)


(மோகன்ராஜ் வில்லவன்) 
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517 

நம் நாட்டுக் கலைஞர்களுக்காக அறிமுகமாகின்றது மலேசிய இந்திய சினிமா விருது விழா. இவ்விழாவை மிகா அவார்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக நம் நாட்டில் நடைபெறுகிறது. இவ்விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு ‘ரவ்லேசியா’ முத்து மாளிகையின் ஆதரவில் தலைநகரிலுள்ள பார்க் ரோயல் பிரபல தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பிராண்ட விருது விழாவில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியீடு கண்ட உள்ளூர் படங்களுக்கான விருது விழாவாக மலரவுள்ளது. கடந்த பத்து வருட காலமாக மலேசியாவின் இந்திய சினிமா துரித வளர்ச்சி கண்டுவருகிறது. 'ஆண்டாள்' படம் தொடங்கி 'மயங்காதே' வரை பல்வேறு நல்ல கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்கள் நமது திரையங்குகளை அலங்கரித்து வருகின்றன


அவற்றில் சிறந்த திரைப்படங்களாக 'வெட்டிப் பசங்க', 'வேற வழி இல்ல', 'ஜகாட்' போன்ற படங்கள் மக்களிடேயை நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், 'மறவன்' போன்ற படங்கள் உலக அங்கீகாரத்தைப் பெற்ற படங்களாக மலேசிய இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளன.

நமது திரைப்படக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அரும்பாடுபட்டு ஒவ்வொரு படியாக முன்னேறிக் கொண்டு வரும் இந்தத் தருணத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் முக்கியம் என்பதை நாங்கள் உணர்கிறோம். அதுவும் தரமான, பிரமாண்ட விருது விழாவாக இருக்க வேண்டும் என்பதை எங்களின் நோக்கம் என்று மலேசிய இந்திய சினிமா விருது பிரைவெட் நிறுவனத்தின் தோற்றுநரும் இவ்விழாவின் தலைமை நிர்வாக இயக்குநருமான ஆர்.ஜி.நாயுடு தெரிவித்தார்.


மிகா' விருது விழாவில் நாங்களும் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். மலேசிய இந்தியக் கலைஞர்களில் ஒரு சிலர் எங்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகம். அவர்களுக்கு மலேசியர்கள் மத்தியில் இருக்கும் பிரபலத்தை நாங்கள் நன்கு அறிவோம். அதனால்தான் இந்த விருது விழாவிற்கு எங்களின் பங்காக 70,000 வெள்ளி மதிப்புள்ள முத்து ஆபரணங்களை சில விருதுகளுக்கு வழங்கவிருக்கிறோம் என்று ‘ரவ்லேசியா’ முத்து மாளிகையின் இயக்குநர் வின்னி சின் குறிப்பிட்டார்.


கடந்த 2015ஆம் ஆண்டு வெளியீடு கண்ட திரைப்படங்கள், குறும்படங்கள், வானொலி தொலைக்காட்சி படைப்பாளர்கள் என மொத்தம் 36 விருதுகள் மிகா விருது விழாவில் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விருதுகளை முறையாக மலேசியா, இந்தியா, ஸ்ரீ லங்கா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுப்பர்.

மேலும், முக்கிய, பிரபலமான விருதுகள் பொதுமக்களால் தேர்ந்தெக்கப்படும். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களின் விண்ணப்பப்பாரங்கள் கிடைக்கப்பெற்று விட்டன. 2015இல் திரையரங்குகளில் அல்லது யுதியுப் அலைவரிசையில் வெளியான குறும்படங்களுக்கான விண்ணப்பத்தை இன்று முதல் மிகா 2016இன் வலைத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


இதனிடேயை, இதுவரை கண்டிராத வகையில் தரமான விருது விழாவாக இவ்விழா அமையவுள்ளது. மிகா பற்றிய மேல் விபரங்களுக்கு www.micaawards.com எனும் வலைத்தளத்தை வலம் வாருங்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு டத்தோ கமில், சுகன் பஞ்சாட்சரம், நம் நாட்டின் முன்னணிக் கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.


MICA Awards Private Limited Association is 

proudly presenting Malaysia Indian Cine

 Awards Exclusive


Article By Yaswini Kanagasabai




             MICA Awards Private Limited Association is proudly presenting Malaysia Indian Cine Awards exclusively for our local artist in Malaysia for the first time. In conjunction with that, the press conference of this event held at Park Royal Hotel with support of Rafflesia the Pearl Centre recently. 
  
                This event will be held to recognize and honour the dedication as well as the hard work of our local artists who worked in the Malaysian Indian Cinema Industry throughout 2015. Lately, our Indian Cinema industry has been flourishing over a decade of years with tremendous achievements. Began from the "Aandal" movie until the "Mayangathey" movie, our cinema industry is continuously presenting the quality movies for the viewers. 

                 Among the movies, Vetti Pasanga, Vera Vazhi Illa, Jagat and many other movies had received positive feedbacks from the audience. Not only that, the most waited Malaysian Tamil Movie of the year 2015, 'Maravan' also has recognized internationally and made its presence felt in international film festivals. 

                MICA 2016 founder and chief executive officer R.G. Naidu stated that it is important to acknowledge and honour the artists, production and the technical team in order to encourage them to be a part in the growth of our cinema industry. The main aim of MICA private limited company is to held the event lively as they feel privilege being a part in this wonderful event. 

                 Whereby, Winnie Sin, the owner of Rafflesia the Pearl centre stated that they will be contributing RM70,000 worth of pearl accesories for this event. Overall 36 awards will be presented in this awards which are category awards, short film awards and Awards for Hosts for the year of 2015. 

                  The juries will be the experts from Malaysia, Singapore, Sri Lanka and India whereas the public will be casting their votes for the Popular Category Awards which consists of Most Popular Movie, Most Popular Actor and Actress. The Entry Form for the movies have been submitted whereby the nominations for the Short film Awards 2015 are now open for submission of entry forms. RG Naidu added that, this event will be a platform to celebrate the success of numbers of  movies which achieved great success in the cinema industry. 

                 The first press conference to announce about the award was attended by Dato Kamil, Malaysian Indian celebrities such as Suhan Panchatcharam, Puspa Narayanan, Jasmin Michael, K.k. Khanna, Haridhass, Shamini and many others. For further details public may visit www.micaawards.com.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement