KVM PRODUCTIONS AUDITION

திறமைகளை வெளிப்படுத்த
கே.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தின் வழி அரிய வாய்ப்பு!



(மோகன்ராஜ் வில்லவன்) 
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517 


தங்களின் திறமைகளை வெளிப்படுத்த தளமில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு கே.வி.எம் தயாரிப்பு நிறுவனம் ஒரு தளத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட கே.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தின் வழி நாட்டில் பல புதுப்புது நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அதிகமான திறமையான கலைஞர்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வரும் கே.வி.எம் தயாரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் வழி கலைஞர்கள் மேலாண்மை செய்ய தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் புதுமுக கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பை ஏற்பாடு செய்து தருகின்றனர். ஆகவே வருகின்ற தீபாவளியை முன்னிட்டு எஸ்.எஸ். ஸ்மார்ட் நேட்வக் நிறுவனமும் கோப்பியோ அனைத்துலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் கோப்பியோ அனைத்துலக தீபாவளி பெருவிழா நடைபெறவுள்ளது. இந்த பெருவிழா 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதில் இளைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு தளம் ஒன்றினை கே.வி.எம் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இத்தளத்தில் ஆடல், பாடல், அறிவிப்பாளர், மேஜிக், காமெடி, நடிப்பு போன்ற கலைகளுக்கான தேர்வு வருகின்ற 23ஆம் தேதி இம்மாதம் பிரிக்பீல்ட்ஸ் கே.எல் சென்ரல் வட்டாரத்தில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வில் அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இப்போட்டியின் நீதிபதிகளாக நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஜெய், அறிவிப்பாளரும் பேச்சாளருமான தமிழ்வாணி, பாடலாசிரியார் யுவாஜி ஆகியோர் பணியாற்றவுள்ளனர்


தேர்ந்தெடுக்கப்படும் படைப்பாளிகளுக்கு கே.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வருகின்ற நிகழ்வுகளுக்கு பணிபுரிவதற்கான வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் அவர்களுடைய கலை பயணத்தை வெற்றிகரமாக ஈட்டுச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளதாக இந்நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் கே.வி. மோர்கன் தெரிவித்தார்.

மேல் விபரங்களுக்கும் முன்பதிவிற்கும் 
+6016-3310626 என்ற என்னுடன் தொடர்புக் கொள்ளலாம்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement