'Geethaiyin Raadhai' movie, a new effort from young talents


இளைஞர்களின் முயற்சியில்


கீதையின் இராதை!


(மோகன்ராஜ் வில்லவன்) 
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517 

உள்ளூர் கலைஞர்களின் அதிகமான கலை படைப்புகள் சமீப காலமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டு வெளியீடு கண்டு வருகின்றன. மயங்காதே படத்தைத் தொடர்ந்து நம் நாட்டின் புதுமுகங்களையும் புதியக் கலைஞர்களையும் கொண்டு கீதையின் இராதை திரைப்படத்தைச் செதுக்கியுள்ளனர்.

நம் நாட்டில் நிகழும் இளைஞர்களின் காதலைப் பற்றியும் அப்பா-மகள் பாசத்தைப் பற்றியுமான கதையம்சத்தைக் கொண்டுள்ளது இத்திரைப்படம். வித்தியாசமான கோணத்தில் இப்படத்தின் கதைக்களத்தைக் கொண்டுள்ளனர். இப்படத்தில் கதாநாயகன் ஜி கிராங்க் எனும் கருணாகரனும் கதாநாயகி சாலினி பாலசுந்தரமும் படத்தில் நடிக்கவில்லை; வாழ்ந்துள்ளனர். கதாநாயகனின் நண்பனாக கலக்கும் விக்ரன் இளங்கோவனின் அதிவேக வசன வெளிப்பாடு அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார் அறிமுக இசையமைப்பாளர் சதிஸ் ராஜ். பாடல் வரிகள் மூலம் கவி நாயகன் யுவாஜி மனதை தாலாட்டச் செய்துள்ளார். குறிப்பாக என்னைக் கொல்லாதே பாடல் வரிகளும் இசையும் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவினர்கள்
இப்படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இயக்குநர் சதிஸ் நடராஜன் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்துள்ளார். படத்தின் நடன இயக்குநர் கிசன் ஜெய் பாடலுக்கு ஏற்றபடி அருமையான நடனத்தை வழங்கியுள்ளார். 




இதனிடையே, நாட்டின் முன்னணி நடிகர்களான கே.எஸ் மணியம், கே.குணசேகரன், ஷான் ஆகியோர் இப்படத்தில் அப்பா கதாப்பத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கே.எஸ் மணியம் அவர்களின் கதாப்பாத்திரம் அப்பா மகள் பாசத்தைப் பற்றி அமைந்துள்ளது. இப்படத்தின் மூலம் தனது தயாரிப்பு நிறுவனமான விகடகவி புரோடக்‌ஷன் வழி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் உள்ளூர் பாடகரும் ஆட்டம் நூறு வகையின் அறிவிப்பாளருமான விகடகவி மகேன் என்கிற மகேந்திரன் ராமன்.

கடந்த ஒரு வருடகாலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இம்மாதம் 22ஆம் நாள் நாடு முழுவது உள்ள திரையரங்குகளை வருட வருகிறது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி என்யு சென்ரலில் நாட்டின் கலையுலக கலைஞர்கள், நிருபர்கள், படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்களுடன் வெற்றிகரமாக திரையீடு கண்டது.


மேலும், இப்படத்தின் விளம்பரப் பணிகளைப் படத்தின் குழுவினர்கள் நாடு தழுவிய அளவில் விளம்பரம் செய்ததில் 8/10க்கு அதிகமான இளைஞர்களிடையே இப்படத்தைப் பற்றி விபரம் தெரிந்துள்ளது. இத்திரைப்படத்தை மக்கள் பார்த்து ஆதரவளிப்பதின் வழி புதிய கலைஞர்களையும் புதுமுக படைப்பாளிகளையும் ஊக்குவிக்க முடியும் என இப்படத்தின் இயக்குநர் சாலினி பாலசுந்தரம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

'GEETHAIYIN RAADHAI' MOVIE, 

NEW EFFORT FROM YOUNG TALENTS


Article By Yaswini Kanagasabai

Our local cinema industry is growing rapidly in the past few years. Besides, our local artists playing an important role in producing numbers of quality movies. After the success of 'Mayangathey' movie, currently 'Geethaiyin Raadhai' production team produced this movie with a crew of new faces in the industry. This movie is fully based on the concept of young generation's love story. Moreover, this movie also well portrayed the bond between father and daughter relationship. It is a movie with different storyline.

Instead of just acting the role given, the movie's actor G Crak and actress Shalini Balasundaram showed their 100% performance by living in the character itself. Not only that, Vicran Elanggoven's acting also has been a talk among the co-artists as he impressed everyone with his wonderful dialogues and performed very well in this movie. He acted as the hero's friend in this movie. The movie consists of 5 amazing songs composed by newly introduced music director Sathish Raj and lyrics by  Kavinayagan Yuwaji received positive feedbacks from the audience. Especially, the 'Ennai Kollathey' song became one of the hit song and impressed everyone. The movie's DOP and editor Sathish Nadarajan completed his work professionally whereas choreographer Kishen Jay made the songs more beautiful with his excellent choreography. Senior artists in the industry K.S.Maniam, K.Gunasegaran and Shan who acted as fathers in this movie made the movie more perfect with their acting. K.S.Maniam portrayed the father - daughter relationship beautifully in this movie.


 Our local artist and also popular TV host Vikadakavi Magen, who is also known as Magendran Raman introduced his Vikadakavi Production Company through this movie. He is also the producer of this movie. The most awaited  'Geethaiyin Raadhai' movie is releasing nationwide on 22nd September. Recently, the premier show was held at NU Sentral. Local co- artists, reporters and the movie's technical team attended the premier show of this movie. The promotion part of this movie successfully achieved their target by promoting it at most of the part in Malaysia. As a result, it managed to catch the youngsters attention and aware 8/10 youngsters about this about this movie. The production crew strongly hoping that the audience will give their full support for this movie. Shalini Balasundaram, director of this movie added that, the support gain from the audience will motivate the new comers in the industry to excel in their field and produce more quality movies in the near future.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement