“கூட்டாளி” வீடியோப் பாடல் இணையத்தைக் கலக்கிறது!
(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517

“கூட்டாளி” பாடலை பாடகர் எம்.ஜே. கோபி மற்றும் அர்வின் பிக்சாய்ஸ் பாடி நடித்துள்ளனர். தினா காண் வீடியோ பாடலுக்கு ஒளிபதிவு செய்துள்ளார். விஜயன் ராதாகிருஷ்ணன் இப்பாடலை தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
+6 010-4692517
டைமன்பெய் எண்டர்டைன்மன் தயாரித்த
“கூட்டாளி” வீடியோ பாடல் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியீடு கண்டது.
தெலுக் இந்தான் இளைஞர்களின் மற்றோரு புதியப் படைப்பு.
நட்பைப் பற்றியும் சக நண்பர்களுக்கிடையே தினசரி நடப்பதை சகஜமாக இப்பாடலில்
எழுதியுள்ளார் கணி ராதாகிருஷ்ணன். முழுக்க முழுக்க நண்பர்களுக்காக உற்சாகப்படுத்தும்
வகையில் பாடல் உருவாகியுள்ளது.
இப்பாடல் அதிகாரப்பூர்வமாக அண்மையில் டுவிட்ஸ்.எப்.எம் இணைய
வானோலியில் வெளியீடு கண்டது. இப்பாடலின் அதிகாரப்பூர்வமாக மீஃபா தலைவர் முரளி
கண்ணன் வெளியீட்டார். அன்றிரவு இணையத்திலும் (டுவிட்ஸ் சிங் யுதியுப் இணைய
அலைவரிசை) “கூட்டாளி” வீடியோ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

“கூட்டாளி” பாடலை பாடகர் எம்.ஜே. கோபி மற்றும் அர்வின் பிக்சாய்ஸ் பாடி நடித்துள்ளனர். தினா காண் வீடியோ பாடலுக்கு ஒளிபதிவு செய்துள்ளார். விஜயன் ராதாகிருஷ்ணன் இப்பாடலை தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இப்பாடலைத் தொடர்ந்து நிழல்களில் வந்தவள் பாடலின் வீடியோப்
பாடல் வேளையை தொடங்கவுள்ளதாகவும் பேராக் காய்ங்கே 2.0 ஆல்பம் வருகின்ற
தைப்பூசத்திற்கு வெளியீடு காணவுள்ளதாகவும் டைமன்பெய் எண்டர்டைன்மனின் தயாரிப்பாளர் விஜயன்
ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இணைய ஸ்டோர் மூலமாக டைமன்பெய் ஆல்பத்தின் பாடல்களை இணையத்தில் வாங்கிக்
கொள்ளலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks