ஆதித்யா அலைவரிசையில் வெளியீடு கண்ட
அன்பே ஆருயிரே
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517
அண்மையில் இணையத்தில்
அனைவரையும் ஈர்த்த அன்பே ஆருயிரே வீடியோ பாடல் அடுத்த இலக்கை அடைந்துள்ளது. குறுகிய காலத்தில்
அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்றால் அதற்கு அப்பாடலின் தயாரிப்பும் இசையும்தான்
காரணம்.
அந்த வகையில் இப்பாடலுக்கு
உயிரூட்டியுள்ளார் இயக்குநர் வதனி குணசேகரன். ஓர் அறிமுக இயக்குநராக இருப்பினும் இப்பாடலின்
வடிவமைப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. இப்பாடலை அடுத்தக் கட்டத்திற்கு
எடுத்துச் செல்வதற்காக வதனியின் நண்பர் பாகியோ இப்பாடலை சன் தொலைக்காட்சியின் எடிட்டர்
நிவாஸுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
![]() |
| வதனி குணசேகரன் |
அதனைத் தொடர்ந்து, சன் டிவியின் மூத்த திட்ட இயக்குநரின்
அழைப்பைத் தொடர்ந்து, சென்னைக்குப் புறப்பட்ட வதனி குணசேகரன்
சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளார்.
மலேசியாவின் முதல் தமிழ் பெண்
இயக்குநர் சன் டிவிக்கு வருகையளித்தது மகிழ்ச்சியாளிப்பதாகவும் தெரிவித்த அவர்கள்,
அன்பே ஆருயிரே வீடியோ பாடல் வெற்றியைப் பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து இயக்குநர் வதனி குணசேகரனிடம் கேட்ட
போது, “சன் டிவி குழுவினர்களின் சந்திப்பைப் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. எனக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான பாராட்டுகள் குவிந்தன" என்றார்.



Congrats
பதிலளிநீக்கு