உள்ளூர் கலைஞர்களின் புதிய படைப்புக்கு

மலேசியர்கள் ஆதரவு வழங்க வேண்டும்!

ரத்தினவள்ளி அம்மையார் வலியுறுத்து


(மோகன்ராஜ் வில்லவன்)

mogan.thaimoli@gmail.com
+6 010-4692517  

புதியப் பயணம் திரைப்படத்தின் கதாநாயகன் ரேவன் & கதாநாயகி லவிஷா

          சமிப காலமாக நம் நாட்டில் அதிகமான படைப்புகள் வெளியீடு கண்கிறது. இளைஞர்களின் புதுபுது படைப்புகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து வருகின்றன. அவ்வகையில் “புதிய பயணம்” எனும் திரைப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் கட்ட காட்சி நேற்று முன்தினம் இங்குள்ள நுயு சென்றலில் மிக விமர்சியாக நடைபெற்றது.


சிறப்பு வருகையாளர்களுடன் திரைப்படக் குழுவினர்கள்
           இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராக மனிதநேய மாமனி ரத்தினவள்ளி அம்மையார், எஸ்.பி புரோடக்‌ஷன் உரிமையாளர் பாலமுருகன் மணிமாறன், டச்டிரோனிக்ஸ் மஹேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உள்ளுர் கலைஞர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

                   கடந்த காலத்தை விட தற்பொது வெளியீடு கண்டு வரும் நம் உள்ளுர் கலைஞர்களின் படைப்புகள் சிறப்பாகவுள்ள்து. நம் நாட்டு கலைஞர்களுக்கு என்னுடை ஆதரவு இப்பொதும் இருக்கும். நம் கலைஞர்களுக்கு நம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். அவர்களின் படைப்புகளுக்கு நம் ஆதரவு வழங்கினால் மட்டுமே நம் கலைப் படைப்புகள் மேலும் நல்ல படைப்புகளுக்கு ஊக்குவிப்பாக இருக்குமேனவும் புதிய பயணம் திரைப்படம் வித்தியசமாகவும் அருமையாகவும் படமாக்கியுள்ளனர் என்று மனிதநேய மாமனி ரத்தினவள்ளி அம்மையார் சிறப்புரையில் தெரிவித்தார்.
திரைப்பட சிறப்புக் காட்சியின்போபோது

                 இத்திரைப்படத்தில் பணிபுரிந்த அதிகமான கலைஞர்களுக்கு இப்படம் முதல் படமாக இருந்தாலும் அவர்களின் படைப்புகளை சிறப்பாக வழங்கியுள்ளனார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரேவன் சுப்ரமணியம் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நடிகை லவிஷா துணை இயக்குநராகவும் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

டி' சினிமா உரிமையாளர் மாராஸ் ரவியுடன் புதியப் பயணம் திரைப்படக்குழுவினர்கள்
                       இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் நிர்வாதமே எனும் பாடலை இந்தியாவைச் சேர்ந்த ஸ்வேதா மோஹன் மற்றும் சின்மாயி ஸ்ரீபதா பாடியுள்ளனர். இப்படலுக்கு கவ்சல்யா வரிகளை சிறப்பாக இயற்றியுள்ளார். இப்பாடல் அண்மையில் இணையத்தில் வெளியீடு கண்டதில் பலர் மனதை வருடி வருகிறது.
                     

ரேவன் & லவிஷா
   இப்படத்தை பொருத்தமட்டில் அணைவருடைய பங்களிப்பு தான் இப்படத்தை முழுமையாக நிறைவு செய்ய முடிந்தது. சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புகள் மிகவும் சவலாக இருந்தது. பாடல்களுக்கான இசை கருகளை தமிழகத்திலிருந்து கொள்முதல் செய்து பாடல்களை நம் நாட்டிலேயை உருவாக்கியுள்ளார் இப்பாடத்தின் இசையமைப்பாளர் எட்வின் எஸ். ஏ. என்று இப்படத்தின் கதநாயகனும் இயக்குநருமான ரேவன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

                          மேலும், 100 நாட்களில் படப்பிடிபை முடித்து தொடர்ந்து 2 ½ வருட கால தயாரிப்புக்குப்பிறகு விரைவில் திரையரங்கிற்கு வரவுள்ளது, இப்படத்திற்கு மக்கள் ஆதரவளிக்கக் கோரி இப்படத்தின் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement