மூன்று நாடுகள் இணைந்து தயாரிக்கும்
படத்தின் கதாநாயகி பெர்லிஜா
!

(மோகன்ராஜ் வில்லவன்)
 mogan.thaimoli@gmail.com
   +6 010-4692517
          பெர்லிஜா ராஜ்
   

          'அதே பாடல்' ஆர்.டி.எம் தொலைக்காட்சித் தொடர் மூலம் மலேசிய சினிமாவிற்கு அறிமுகமான பெர்லிஜா ராஜ், உள்ளூர் தயாரிப்புகளான இரவன், விவாகரத்து போன்ற பல படங்களைத் தொடர்ந்து அண்மையில் வெளியீடு கண்ட கபாலி படத்தில் சிறு வேடத்தில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

  சுவிட்ஸர்லாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக பெர்லிஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிகமான பட வாய்ப்புகள் வந்தாலும் நிதானமாக தேர்வு செய்து நடிக்கும் ஆற்றல் கொண்ட பெர்லிஜா ராஜ், கடந்த ஆண்டு தனது பிறந்த நாட்டிற்குத் திரும்பி அங்குள்ள சினிமாவில் தனது கலைப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஹலோ, நீ நான் பேய் நிகழ்ச்சிகளிலும் சண்டியன் எனும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீப காலமாக மாடலிங் துறையிலும் கலைக் கட்டி வரும் பெர்லிஜாவிடம், மலேசியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள வித்தியாசத்தை கேட்டபோது, மலேசியா என்னுடைய இரண்டாவது நாடாக இருப்பினும், எனக்கு மிகவும் பிடித்த நாடு என்றார்.

இங்குள்ளவர்கள் அன்பு நிறைந்தவர்கள். திறந்த மனப்பான்மை கொண்டவர்கள். இன்றுவரை என்னுடன் தொடர்பு கொண்டுவரும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement