கே ஏல் வேம்பயர் – வித்தியாசமான பேய் கதை!

(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517

சிசிடிவி படத்தின் மூலம் மலாய் சினிமாவில் இயக்குநராகிய டேவன் ராகவன் மீண்டுமோறு மலாய் படத்தை இயக்குகிறார். இப்படத்தை  சினிமாயா, அப்பெல்கிரோஸ் புரோடக்ஸன் தயாரிப்பில் உருவாகுகிறது. இப்படத்திற்கு கே ஏல் வேம்பயர் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் இந்தோனேசியா மலேசிய கலைஞர்கள் இணைகின்றனர். கே ஏல் வேம்பயர் படத்தை பொறுத்தமட்டில் மனிதர்கள் அறியாத ஆதிகால “ப்போந்தியனாக் எனும் பேய்கள் சார்ந்த கதைக்கலத்தை கொண்டுள்ளது.
இப்படத்தில் உள்ளுர் கலைஞர்கள் ராஜா இல்யா, டெனிஸ் குமார், ஏய்ரில் ஜாப்ரில், ரின் ராயிம், டோனி அலாம்ஸ்யா, ஜோஸ்யா ஒகான், யுஸ் முகமட் நோர், சய்புல் அபேக் என மேலும் அதிகமான முன்னணி கலைஞர்களும் துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 7ம் தேதி தொடங்கி 35 நாட்களுக்கு நடைப்பெறும். வித்தியசமான கதையம்சத்தை இப்படத்தின் இயக்குநர் டேவன் ராகவன் உருவாக்கியுள்ளதாகவும் இப்படம் மலேசிய மட்டுமின்றி இந்தோனேசியா, சிங்கப்பூர், ஹொங் கொங் மற்றும் புரூணை போன்ற நாடுகளில் வருட இறுதில் வெளியீடு காண தீட்டமிட்டுள்ளதாக கே ஏல் வேம்பயர் படத்தின் தயாரிப்பாளரான டத்தோஸ்ரீ டக்டார். எம். பாண்டியன் ப்பெர்ல் அணைத்துலக தங்கும் விடுதியில் நடைப்பெற்ற பத்திரிக்கை சந்திப்பின்போது தெரிவித்தார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement