SADHANA SARGAM CONCERT WILL HELP TO THE CHARITY HOME

சாதனா சர்கமின் மாபெரும் நட்சத்திர கலை நிகழ்ச்சி வழி ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி


(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517  



நம் நாட்டில் நடைப்பெறவுள்ள சாதனா சர்கமின் அறநிதிக்கான மாபெரும் நட்சத்திர கலை நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்டு 20 ஆம் தேதி ஷா ஆலம், மிட்லண்ட்ஸ் மாநாடு மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது. இதன் வழி கிடைக்கப்பெரும் தொகையை முன்று ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாகவே நிகழ்ச்சி ஆதரவாளர்களின் ஒருவரான ஏரா குழுமத்தின் நிர்வாகியும் கிளாப் கிராக் மலேசியவின் தலைவருமான டத்தோ முகமாட் சுக்கூர் வெ.15 ஆயிரத்திற்கான பொருட்களையும் அன்றாட அத்தியவாசியப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
ஆகேயால், இந்நிகழ்வின் வழி கிடைக்கபெறும் பணத்தை மக்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளதாகவும். இந்நிகழ்வுக்கு மக்கள் ஆதரவளிக்க கோரி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஸ்ரப் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் இந்தியவைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகி சாதனா சர்கம், ஏ. ஆர். ரெய்ஹானா, ஹரிஷ் ராகவேந்திரா, நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை வரலெட்சுமி, சூப்பர் சிங்கர் திவகர், சொனிய, மானாட மாயிலடா நடனமணிகளும்  மற்றும் பல கலைஞர்களுடன் நம் நாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து இந்த கலை நிகழ்ச்சியை படைக்கவுள்ளனர் என்று நிகழ்ச்சி ஏற்பாடு குழுவினர்களில் ஒருவரான சல்மான் தெரிவித்தார்.

இந்நிகழ்வை சலீம் சித்தி எண்டர்பிரைஸ், ஆல் சிசன்ஸ், எரா குழுமம் ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்வுக்கு பிபிபி இளைஞர் பிரிவு மற்றும் சென்னை புரோப்பெட்டிஸ் உருதுணையாகவுள்ளனர். மேலும் இந்நிகழ்விற்கு எஸ்.ஜி டிராவல்ஸ் நிருவனமும் ஆதரவு வழங்குவாதாகவும் நிகழ்ச்சியின் விளம்பரங்களை ஆர்.பி.எஸ் குழுவினர் நிர்வாகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement