இரு நாட்டுக் கலைஞர்களோடு ஒன்றிணைந்து நடிப்பது ஒரு புதிய அனுபவம்!
![]() |
| நடிகர் பாப்லோ அமிருல் |
(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517
அனாக் ஜந்தான் படம்
மூலமாக துணை நடிகராக அறிமுகமாகி மோடலிங், அறிவிப்பாளராக 14க்கும் மேலான படங்களில் கதாநாயகனாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்த பாப்லோ
அமிருல் இம்முறை கேஎல் வேம்பாயர் படத்தில் வேம்பாயராக நடிக்கிறார்.
முதல் முறையாக இரு
நாடுகளின் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாடுகளின்
கலைஞர்கள் ஒன்றிணைந்து நடிக்கும்போது நம் நாட்டு சினிமா பின்தங்கியுள்ள காரணத்தைக்
கண்டறிய முடிகிறது. இப்பிரச்சினைகளைக் களைந்து நம் நாட்டு சினிமா
வளர்ச்சிக்காக தயாரிப்புக் குழுவினர் முயற்சிக்கின்றனர் என்று பாப்லோ அமிருல் கூறினார்.
![]() |
| (சண்டைக் காட்சி பயிற்சியின் போது) |
மேலும், இப்படத்தின் கதையம்சத்திற்கும் தயாரிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கினால் இந்தோனேசியா படத்திற்கு நிகராக அமையும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks